எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

காளிஃப்லவர் முட்டை கீமா




செய்முறை




காலிஃப்லவர் -1 சிறியது
சுத்தம் செய்து மிக பொடியாக, அதாவது துருவியது போல் நறுக்கி வைக்கவும்.



மசாலாவிற்கு

பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 8 பல்
காய்ந்த மிளகாய் - 5
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
மஞ்சதூள்

இவை அணைத்தையும் விழுதாக அரைக்கவும்.







பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் அரைத்த விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.




பின் அதில் காயை சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து , மூடி வேகவைக்கவும். பச்சை பட்டானி இருந்தால் , சிறிது சேர்க்கவும்.


காய் வெந்து, தண்ணீர் வற்றியவுடன்

3 முட்டை, சிறிது உப்பு சேர்த்து, நன்கு வறுக்கவும்.


உதிரியாக வரும் வரை வறுத்து, கொத்தமல்லி தூவவும்.



இதை  தோசை மேல் தூவி சுடலாம்,

சப்பாத்தி ரோல் செய்யலாம்,

சாதத்துடன் பறிமாறலாம்,

ப்ரெட் நடுவில் வைத்து உண்ணலாம்,

இட்லி சுடும் பொழுது- சிறிது மாவு, நடுவில் இதை வைத்து, மேல் சிறிது மாவு ஊற்றி , ஸ்டஃப்ட் இட்லி செய்யலாம்.










No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...