எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

தக்காளி கடைசல் ( கத்தரிக்காய், உருளைக்கிழங்கு)



செய்முறை



குக்கரில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, அதனுடன் நறுக்கிய

சின்ன வெங்காயம் - 1/2 கப்
தக்காளி  - 5
பச்சை மிளகாய் - 5
கறிவேப்பிலை
கத்தரிக்காய் - 4
உருளைக்கிழங்கு - 1 பெரியது

சேர்த்து ,தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

குறிப்பு:
இதனுடன் பீர்க்கங்காய், சுரக்காய் கூட சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.

தக்காளி லேசாக தண்ணீர் விட்டு வரும் பொழுது, மஞ்சதூள் மற்றும் 3/4 கப் தண்ணீர் சேர்த்து, மூடி, 1 விசில் விட்டு , அடுப்பை அணைக்கவும்.





தண்ணீரை வடித்து விட்டு, மத்தால் மசிக்கவும் அல்லது மிக்சியில் 1 அடி அடித்து, வடித்து வைத்த தண்ணீரை சேர்த்து கலக்கி பறிமாறவும்.

இது இட்லி, வெந்தய இட்லி, தோசை வகைகளுடன் சுவையாக இருக்கும்.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...